இளையராஜாவுக்காக கமல்ஹாசன் பாடிய பாடல் – இணையத்தில் வைரல்|Kamal Haasan’s song for Ilayaraja

சென்னை,
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடந்தது. அப்போது, இளையராஜாவுக்காக மேடையிலேயே கமல்ஹாசன் பாடிய பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, ”இளையராஜா பாடல்களுக்கு சிம்பொனி இசைக்கு நம் கண்கள் நனைந்த போது வெளியே மண்ணும் நிறைந்திருக்கிறது. இளையராஜா உடன் நான் கடந்த 50 ஆண்டுகள் ஆச்சரியமிக்கது. என் அண்ணனாக இளையராஜாவை வாழ்த்துகிறேன்.
பாடல் வரிகள் வழியாக அவரை வாழ்த்த ஆசைப்படுகிறேன். சுருதி விலகினால் மன்னிக்கவும்.
‘உனை ஈந்த உலகுக்கு நன்றி… நம்மை சேர்த்த இசைக்கு நன்றி… மாறாத ரசிகர் சொல்லும் நன்றி… மனம் கொண்ட உறவு சொல்லும் நன்றி… உயிரே வாழ்… இசையே வாழ்… தமிழே வாழ்…”என்றார்.