இளம் தயாரிப்பாளருடன் புதிய படத்தை அறிவித்த சிரஞ்சீவி|Chiranjeevi announces new project with young producer

ஐதராபாத்,
தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் ”குபேரா” படத்தின் வெற்றி விழா நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில், சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது ஒரு உற்சாகமான அறிவிப்பை சிரஞ்சீவி வெளியிட்டார். அதன்படி, மறைந்த தயாரிப்பாளர் நாராயண் தாஸ் நரங்கின் பேத்தி ஜான்வி நரங்குடன் விரைவில் ஒரு புதிய படத்தில் பணியாற்றப் போவதாக சிரஞ்சீவி தெரிவித்தார்.
ஜான்வி ஏற்கனவே ராணா டகுபதியுடன் இணைந்து, பிரியதர்ஷி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ”பிரேமந்தே” என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.