இளநரையை நிரந்தரமாக நீக்க உதவும் இயற்கை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?

இளநரையை நிரந்தரமாக நீக்க உதவும் இயற்கை எண்ணெய்: எப்படி தயாரிப்பது?


அனைவருக்கும் முடி உதிர்தல், வலுவிழந்த முடி, வறண்ட முடி, பொடுகு மற்றும் நரை முடி போன்ற பிரச்சனைகள் இருக்கிறது.



இயற்கை முறையில் நரைமுடியை கருப்பாக மாற்ற உதவும் எண்ணெயை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.   

தேவையான பொருட்கள்



  • தேங்காய் எண்ணெய்- ½ லிட்டர்

  • கறிவேப்பிலை- 1 கைப்பிடி

  • வெந்தயம்- 1 ஸ்பூன்



தயாரிக்கும் முறை



முதலில் ஒரு இரும்பு வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.


பின் கறிவேப்பிலையை நன்கு கழுவி ஒரு துணியில் போட்டு உலர்த்தி எடுத்துக்கொள்ளவும்.

இளநரையை நிரந்தரமாக நீக்க உதவும் இயற்கை எண்ணெய்: எப்படி தயாரிப்பது? | Home Made Natural Hair Oil For Grey Hair In Tamil

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் உலர்த்திய கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.


இதற்கடுத்து கொதிக்கின்ற தேங்காய் எண்ணெயில் அரைத்த கறிவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்.


இதனைதொடர்ந்து அதில் வெந்தயம் சேர்த்து எண்ணெய் நிறம் மாறி வரும்வரை நன்கு கொதிக்கவைக்கவும்.

இறுதியாக இந்த எண்ணெயை ஆறவைத்து ஒரு துணியில் வடிகட்டி எடுத்து தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.


இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி வளரும் மற்றும் நரைமுடியை நிரந்தரமாக நீக்க உதவும்.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *