இரண்டு மாதங்களாக டிரெண்டிங்கில் டாப்…ஓடிடியில் பட்டையை கிளப்பி வரும் கிரைம் திரில்லரை எதில் பார்க்கலாம்?|know this crime thriller mandala murders 8 episode series now trending in netflix-ott

இரண்டு மாதங்களாக டிரெண்டிங்கில் டாப்…ஓடிடியில் பட்டையை கிளப்பி வரும் கிரைம் திரில்லரை எதில் பார்க்கலாம்?|know this crime thriller mandala murders 8 episode series now trending in netflix-ott

சென்னை,

இப்போது நாம் பேசும் வெப் தொடர் இரண்டு மாதங்களாக டிரெண்டிங்கில் டாப் இடத்தில் உள்ளது. இந்தத் வெப் தொடர் மர்மம், திகில் மற்றும் திரில்லர் கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. இதன் பெயர் மண்டலா மர்டர்ஸ்.

இது ஜூலை 25-ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியானது. முதல் நாளிலிருந்தே இதற்கு நல்ல வரவேற்பு. இந்தத் தொடர் வெளியானதிலிருந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நெட்பிளிக்ஸின் டாப் 10 பட்டியலில் உள்ளது.

இந்தத் தொடர் ‘தி புட்சர் ஆப் பெனாரஸ்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. இதில் வாணி கபூர், சுர்வீன் சாவ்லா மற்றும் வைபவ் ராஜ்குப்தா ஆகியோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

கோபி புத்ரன் மற்றும் மனன் ராவத் ஆகியோர் இயக்கியுள்ள இந்த தொடர் மொத்தம் 8 எபிசோடுகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு எபிசோடும் சுமார் 40 நிமிடங்கள் நீடிக்கும். இது தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்டிரீமிங் ஆகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *