இயக்குனர் ரவி பாபுவின் அடுத்த படம்….டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு|Ravi Babu’s Next Film Titled Razor; Gruesome Glimpse Released

சென்னை,
இயக்குனர் ரவி பாபு இன்று தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு ரேஸர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியாகி உள்ள 45 வினாடிகள் கொண்ட டைட்டில் கிளிம்ப்ஸ் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் உள்ளது.
அந்த கிளிம்ப்ஸில் கைகள், உடல், தலை துண்டாவது உள்ளிட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நிரம்பியுள்ளன.
பிளையிங் பிராக்ஸ் மற்றும் சுரேஷ் புரொடக்சன்ஸ் மீண்டும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன, இது அடுத்தாப்டு கோடையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






