இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

இயக்குனர் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்


சென்னை,

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான’பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் மிகுந்த பாராட்டை பெற்றது. இதையடுத்து, தனுஷ் நடித்த ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’,மற்றும் ‘வாழை’ உள்ளிட்ட படங்களை மாரி செல்வராஜ் இயக்கினார்.

கடந்த ஆண்டு இவர் இயக்கிய வாழை திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் இயக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்பொழுது துருவ் விக்ரம் நடிப்பில் ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தை இயக்குகிறார்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாரி செல்வராஜுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் அவர்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாரி செல்வராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “திரைமொழியில் மனிதம் பேசும் மகத்தான இயக்குநர். ஒடுக்கப்பட்ட – விளிம்பு நிலை மக்களின் வலியையும் – அவர்களுக்கான அரசியலையும் தனது படைப்புகளின் மூலம் இடைவிடாது பேசி வரும் ஆகச்சிறந்த படைப்பாளி மாரி செல்வராஜுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணிகள் மென்மேலும் சிறக்கட்டும் – கனவுகள் கைகூடட்டும். என் அன்பும், வாழ்த்தும்!” என கூறியுள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *