இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மாரடைப்பால் காலமானார்


சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாரதி ராஜா. இவரது இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து மனோஜ் “சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கியுள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனோஜ் பாரதிராஜா(48), மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *