இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் “திரிடம்” பர்ஸ்ட் லுக் போஸ்டர்

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் “திரிஷ்யம்”. இப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது மட்டுமின்றி சீனா, கொரியா போன்ற உலக மொழிகளிலும் ரீமேக் ஆனது. இப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் என்ற பெயரில் 2015-ல் வெளியானது. இதில் கமல்ஹாசன், கவுதமி, நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். மலையாளத்தை போல் தமிழிலும் இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஷேன் நிகம், நாயகனாகவும் கவனம் பெற்று வருகிறார்.தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். தற்போது, ஷேன் நிகம் பல்டி எனப் பெயரிட்ட தன் 25-வது படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மலையாள நடிகர் ஷேன் நிகமின் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் வழங்குகிறார். ‘திரிடம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை இ4 எக்ஸ்பிரிமென்ட் மூவிஸ், பெட் டைம் ஸ்டோரிஸ் இணைந்து தயாரித்துள்ளது. மார்டின் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜெமோன் ஜான், லின்டோ தேவசிய இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்கள். ஒவ்வொரு விசாரணையும் புதிய கண்டறிதலில் தொடங்கும் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு கூறியுள்ளது.