‘இப்படி செய்யலாமா..’- வருத்தத்தில் உள்ள கியாரா அத்வானி | ‘Can I do this..’

மும்பை,
அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர்., கியாரா அத்வானி நடித்துள்ள ‘வார்-2′ படம் வருகிற 14-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் ‘டிரெய்லர்’ சமீபத்தில் வெளியானது. அதனைத்தொடர்ந்து ‘ஆவன் ஜாவன்…’ என்ற பாடல் வெளியானது. அந்த பாடலில் கியாரா அத்வானி பிகினி உடையில் கவர்ச்சிகரமாக தோன்றியது, இளசுகளை உற்சாகம் கொள்ள செய்தது.
இதனைத்தொடர்ந்து படத்தை தணிக்கை செய்து ஆபாச காட்சிகளை நீக்கக்கோரி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திய நிலையில், குறிப்பிட்ட பாடலில் கியாரா அத்வானி ‘பிகினி’ உடையில் தோன்றும் 9 வினாடி காட்சிகளை படக்குழு நீக்கியுள்ளது. படத்துக்கு தணிக்கை குழு யு.ஏ. சான்றிதழ் வழங்கியுள்ளது.
‘பிகினி’ காட்சிகள் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் சோகமாக இருக்கிறார்கள். அதேபோல கியாரா அத்வானியும் வருத்தத்தில்தான் இருக்கிறாராம்.“இப்படி செய்யலாமா? இதைத்தாண்டி பலரும் கவர்ச்சியாக நடித்துள்ளார்கள். அதையெல்லாம் என்ன செய்வார்களாம்?”, என்று பொங்குகிறாராம்.