‘இன்னும் சில நாட்களில் தாம்பத்திய வாழ்க்கை’ – ரஜினியின் ‘கூலி’ பட நடிகை வெளியிட்ட தகவல் | ‘Marital life in a few days’

பெங்களூரு,
கன்னட திரைஉலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ரச்சிதா ராம். இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்திலும் நடித்து இருந்தார். தற்போது 33 வயதான நடிகை ரச்சிதா ராம் கன்னட திரைஉலகில் ‘டிம்பிள் குயின்’ என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் நடிகர்கள் புனித் ராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்டோருடனும் நடித்து உள்ளார்.
இந்த நிலையில் இவர் பெங்களூருவில் திரைப்பட விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரிடம் நிருபர்கள் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நடிகை ரச்சிதா ராம், ‘இன்னும் சில நாட்களில் நான் தாம்பத்திய வாழ்க்கையில் கால் பதிக்க இருக்கிறேன். எனக்கு கணவனாக வரப்போகிறவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு எந்தவித கனவும் இல்லை. வீட்டில் எனக்கு வரன் பார்க்கும் படலம் வேகமாக நடந்து வருகிறது’ என்றார். இவரது நடிப்பில் ‘லேண்ட் லார்ட்” மற்றும் அயோக்யா-2 ஆகிய 2 திரைப்படங்களும் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.