‘இனி என் ஆட்டத்தை பாருங்கள்..’- நடிகர் ராதாரவி | ‘Now watch my performance..’

‘இனி என் ஆட்டத்தை பாருங்கள்..’- நடிகர் ராதாரவி | ‘Now watch my performance..’


சென்னை,

தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ராதாரவி, படங்களில் வில்லத்தனத்தில் மிரட்டக்கூடியவர். குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கக்கூடியவர். நடிகர் சங்க பொதுச்செயலாளராக நீண்டகாலம் பணியாற்றியவர். இடையில் உடல் நலக்குறைவால் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த ராதாரவி, தற்போது படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அந்தவகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ராதாரவி புதிய படத்தில் நடிக்கிறார். நாகா வெங்கடேஷ் இயக்கத்தில் சாண்டி – ஆஸ்னா சவேரி நடிக்கும் ‘தில்லை’ என்ற படத்தில் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராதாரவிக்கு ஜோடியாக மூத்த நடிகை அம்பிகா நடிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக சென்னையிலும் நடக்க இருக்கிறது.

இதுகுறித்து ராதாரவி கூறும்போது, ”முன்புபோல மீண்டும் படங்களில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. புதிய படக்கதைகளும் வந்துகொண்டிருக்கிறது. சினிமா என் ரத்தத்தில் ஊறிய விஷயம். அதில் இத்தனை ஆண்டுகள் பயணிப்பது பெருமைக்குரிய ஒன்று. இனி என் ஆட்டத்தை பாருங்களேன்”, என்கிறார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *