‘இனி அப்படியொரு படம் பண்ண வாய்ப்பில்லை’ – வெற்றிமாறன்|’There’s no chance of making a film like that again’

சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி மற்றும் சூரி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘விடுதலை ‘. இசைஞானி இளையராஜா இசையமைத்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து இதன் 2-ம் பாகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், விடுதலை 2 படத்திற்கான விருது வழங்கும் விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துகொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், “உடல் உழைப்பு, மூளை உழைப்பு, தத்துவ, அரசியல் ரீதியாக கத்துகிட்ட எல்லா விசயத்தையும் சேர்த்து நான் பண்ண சிறப்பான படம் விடுதலை. இனி அப்படியொரு படம் பண்ண முடியுமான்னு தெரியல” என்றார்.