‘இனிமேல் ஒரு வருடத்திற்கு இத்தனை படம் மட்டுமே’ – அஜித்தின் அதிரடி முடிவு | ‘From now on, only this many films per year’

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2025-ல் கோடை விடுமுறையையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் அடுத்ததாக சிறுத்தை சிவா, பிரசாந்த் நீல் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இவர் துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார். அதற்காக தீவிரமாக பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்தநிலையில் நடிகர் அஜித்குமார், அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, இனிமேல் வருடத்திற்கு ஒரு படம் தான் பண்ணப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் இந்த அதிரடி முடிவு, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.