இந்த தேதியில் வெளியாகும் சம்யுக்தா மேனனின் அடுத்த பட டீசர்|The teaser of NariNariNadumaMurari is coming on Dec 22nd

இந்த தேதியில் வெளியாகும் சம்யுக்தா மேனனின் அடுத்த பட டீசர்|The teaser of NariNariNadumaMurari is coming on Dec 22nd


சென்னை,

கடந்த 1990-ம் ஆண்டு நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் “நரி நரி நடுமா முராரி”. இது அவரது கெரியரில் மறக்கமுடியாத படங்களில் ஒன்று. ‘எங்கேயும் எப்போதும்’பட நடிகர் ஷர்வானந்தின் 37வது படத்திற்கு “நரி நரி நடுமா முராரி” எனப்பெயரிடப்பட்டுள்ளது.

அனில் சுங்கராவின் ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இப்படத்தை சமாஜவரகமனா புகழ் ராம் அப்பாராஜு இயக்குகிறார். இதில் சம்யுக்தா, சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

விஷால் சந்திரசேகர் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, டீசர் வருகிற 22-ம் தேதி வெளியாகிறது.

இதில் கதாநாயகியா நடித்திருக்கும் சம்யுக்தா மேனன் கடைசியாக ’அகண்டா 2 ’படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *