'இந்த இரண்டு காரணங்களுக்காகதான் அரசியலுக்கு வருகிறார்கள்' – நடிகர் சோனுசூட்

'இந்த இரண்டு காரணங்களுக்காகதான் அரசியலுக்கு வருகிறார்கள்' – நடிகர் சோனுசூட்


மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட். இவர் இந்தியில் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். தமிழில், சந்திரமுகி, ஒஸ்தி, தேவி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இது மட்டுமில்லாமல் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்துவருகிறார் சோனுசூட்.� இதுபோன்ற நல்ல செயல்களால் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார்.

இந்த நிலையில், அரசியலுக்கு வந்தால் “சுதந்திரத்தை” இழக்க நேரிடும் என்று சோனுசூட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

‘வாழ்க்கையில் பிரபலமடையத் தொடங்கும் போது, நாம் வாழ்க்கையில் உயரத் தொடங்குகிறோம், உயரமான இடங்களில் ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். எனவே ஒருவர் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

அரசியலுக்கு சென்றால் மற்றவர்களுக்கு உதவுவதற்கான “சுதந்திரத்தை” இழக்க நேரிடும் என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது. இதனால், அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.

அரசியலுக்கு இரண்டு காரணங்களுக்காக வருகிறார்கள் என்று நினைக்கிறேன். ஒன்று பணம் சம்பாதிப்பதற்காக, மற்றொன்று அதிகாரத்திற்காக. இந்த இரண்டின் மீதும் எனக்கு ஆசை இல்லை. மக்களுக்கு உதவுவதற்காக வருகிறார்கள் என்றால், நான் ஏற்கனவே அதைச் செய்து வருகிறேன்’ என்றார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *