இந்தியில் பேச மறுத்த நடிகை கஜோல்

பாலிவுட் திரையுலகின் கதாநாயகிகளில் கஜோல் முக்கியமானவர். சமீபத்தில் அவர் மகாராஷ்டிரா அரசு வழங்கிய மாநில திரைப்பட விருது 2025 விழாவில் கலந்து கொண்டார். கஜோல் கலைத்துறையில் செய்த செயல் மற்றும் அவரது இந்திய சினிமா பங்களிப்பை முன்னிட்டு கவுரவ விருதான ராஜ் கபூர் விருதை வழங்கினர்.
அப்போது அங்கு பத்திரைக்கையாளர்களை சந்தித்தார் கஜோல். கஜோல் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழியில் பதிலளித்தார். அப்போது ஒருவர் இந்தியில் பதிலளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதை கேட்ட கஜோல் சாட்டென கடுப்பாகி ” இப்போ நான் இந்தியில் பேச வேண்டுமா? நான் பேசியது புரிய வேண்டியவர்களுக்கு புரியும்” என்ற கருத்தை பதிவு செய்துவிட்டு கிளம்பினார். இந்த காணொலி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக இந்தி மற்றும் மராத்தி மொழிகளுக்கு இடையே நிகழும் சர்ச்சையால் கஜோலின் இப்பதில் காரசார விவாதமாக மாறியுள்ளது.
நடிகை கஜோல் பாலிவுட்டின் முன்னனி நாயகியாக இருந்தவர். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. தமிழில் நடிகர் பிரபு தேவாவுடன் மின்சாரக் கனவு படத்தில் நடித்திருந்தார். பின், நீண்ட காலம் கழித்து நடிகர் தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி – 2’ திரைப்படத்தில் வில்லியாக நடித்து கவனம் பெற்றார். .