இந்தியாவில் முதல் நாளே ரூ.10 கோடி முன்பதிவுகளை கடந்த ஜப்பானிய அனிமேஷன் படம்

சென்னை,
ஜப்பானிய அனிமேஷன் தொடர்களுக்கு இந்திய இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், பிரபல ஜப்பானிய மங்கா தொடரை (Manga Series) தழுவி ‘டீமன் ஸ்லேயர்: கிமெட்ஸு நோ யைபா – இன்பினிட்டி கேஸ்டில்’ (Demon Slayer – Kimetsu no Yaiba Infinity Castle) என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
“கிமெட்ஸு நோ யைபா” தொடரில் இடம்பெற்ற “இன்பினிட்டி கேஸ்டில்” அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்த படம் இந்தியாவில் செப்டம்பர் 12-ந்தேதி (நேற்று) ரிலீசானது.
இந்தியாவில் இந்த படம் முதல் நாளே ரூ.10 கோடி முன்பதிவுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியைக் காண சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் இளைஞர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர். இந்த படம் இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக ‘2K கிட்ஸ்’ மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.