”இந்தியாவில் அவருடைய நட்சத்திர அந்தஸ்தை யாராலும் தொட முடியாது ‘- பிரபல பாலிவுட் இயக்குனர்|Hindi director says no one can touch Allu Arjun’s stardom in India

சென்னை,
பிரபல பாலிவுட் திரைப்பட இயக்குனர் மதுர் பண்டார்கர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை இந்திய சினிமாவின் புதிய சூப்பர் ஸ்டார் என்று பாராட்டி இருக்கிறார்.
புஷ்பாவின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்து யாருடனும் ஒப்பிடமுடியாத அளவுக்கு உயரத்தை எட்டியுள்ளதாக கூறினார்.
அவர் கூறுகையில், “இன்றைய காலகட்டத்தில், அல்லு அர்ஜுனின் நட்சத்திர அந்தஸ்தை யாராலும் தொட முடியாது. அவர்தான் உண்மையான பான் இந்திய நட்சத்திரம்,” என்றார்
தற்போது அல்லு அர்ஜுன், அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.