இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.|Ajith in Kerala… He visited the Oottukulangara temple in Palakkad with his daughter

பாலக்காடு,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். தமிழ் சினிமாவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை கொண்ட நடிகராகவும் இருந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான குட் பேட் அக்லி படம் நல்ல வரவேற்பை பெற்றது.
அஜித்தின் அடுத்த படத்தையும் குட் பேட் அக்லி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்க உள்ளார். அப்படத்தின் பிரீ புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் அஜித் குமார் தனது மகளுடன் பாலக்காட்டில் உள்ள ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






