'இதனால்தான் ராஷ்மிகாவை கதாநாயகியாக தேர்ந்தெடுத்தேன்' – 'சாவா' பட இயக்குனர்

சென்னை,
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி – சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘சாவா’. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் லக்ஸ்மன் உடேகர் இப்படத்திற்கு ராஷ்மிகாவை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
“ராஷ்மிகா எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அருமையாக நடிக்கக்கூடியவர். அவரது உடல் மொழி எந்த விதமான கதாபாத்திரத்திற்கும் பொருந்தும். இதனால்தான் சாவா படத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதை அறிந்தேன். ராஷ்மிகா இப்படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவார்’ என்றார்