'இட்லி கடை' அவருடைய கதையா ? நடிகர் தனுஷ் சொன்னது என்ன?

மதுரை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.’யு’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படக்குழு புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் நேற்று இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பரிதாபங்கள் யூடியூப் சேனல் பிரபலம் கோபி மற்றும் சுதாகர் கலந்து கொண்டனர்.
அவர்கள் தனுசிடம் இட்லி கடை படத்தின் கதை கோவையில் ஒரு பிரபல சமையல் கலைஞரின் கதை தான் இட்லி கடை படம் என்கிறார்களே ? அது உண்மையா ? என்று கேள்வி கேட்டனர். அதற்கு இட்லி கடை திரைப்படம் முழுக்க முழுக்க கற்பனை கதை தான். நான் சிறு வயதில் இருந்த ஊரில் வாழ்ந்தவர்களை வைத்து கற்பனையாக உருவாக்கிய கதை தான் இட்லி கடை என பதிலளித்தார். இதன் மூலம் இட்லி கடை திரைப்படம் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு தனுஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.