இசை ஆல்பம் மூலம் இயக்குநராக களமிறங்கிய நடிகர் ஷாம்

தமிழ் சினிமாவில் கடந்த 25 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்கவைத்து பயணித்து வருபவர் நடிகர் ஷாம். தற்போது முதன்முறையாக ஆல்பம் தயாரிப்பில் இறங்கி, ‘வரும் வெற்றி’ என்கிற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளதன் மூலம் ஒரு இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் ஷாம்.
எஸ்ஐஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார். அம்ரிஷ் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் வடிவமைத்துள்ளார்.
கன்னட திரை உலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப் இப்பாடலை பாடியுள்ளார் என்பது தான் இந்த ஆல்பத்தின் இன்னொரு ஹைலைட்டான அம்சம்.






