ஆஸ்கர் விருது வென்ற பிரபல நடிகை காலமானார்

வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை டைனி கெர்டன் (வயது 79). இவர் 1970ம் ஆண்டு சினிமா துறைக்குள் நுழைந்தார். தி காட்பாதர், தி காட்பாதர் பார்ட் 2, அனி ஹால், கிரைம்ஸ் ஆப் ஹார்ட், மென்ஹடன், சம்மர் கேம்ப் உள்பட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இதில், அனி ஹால், தி காட்பாதர் ஆகிய படங்களுக்காக டைனி கெர்டன் ஆஸ்கர் விருது வென்றுள்ளார். மேலும், பல்வேறு படங்களுக்காக சிறந்த நடிகைக்கான அகாடமி விருது, எமி விருது, கோல்டன் குளோம் விருது என பல்வேறு விருதுகளை டைனி கெர்டன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு, வயது முதிர்வு காரணமாக நடிகை டைனி கெர்டன் நேற்று காலமானார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.