ஆஸ்கர் விருது – புதிய விதிமுறை வெளியீடு | Oscar Award

ஆஸ்கர் விருது – புதிய விதிமுறை வெளியீடு | Oscar Award


சென்னை,

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 97-வது ஆஸ்கர் விழா நடைபெற்றது. இந்நிலையில், அடுத்த ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜனவரி 22ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில், ஆஸ்கர் விருது வழங்கும் தேர்வு குழுவுக்கு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதாவது, தேர்வு குழுவில் உள்ளவர்கள், பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து படங்களையும் முழுமையாக பார்க்க வேண்டும் என புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *