ஆஸ்கர் ரேஸில் காந்தாரா சாப்டர் 1.. இறுதிப் பட்டியலுக்குள் நுழையுமா என எதிர்பார்ப்பு

ஆஸ்கர் ரேஸில் காந்தாரா சாப்டர் 1.. இறுதிப் பட்டியலுக்குள் நுழையுமா என எதிர்பார்ப்பு


ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த அக்டோபர் வெளியானது. இப்படம் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடக்க உள்ள 98-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படப் பிரிவில் போட்டியிடத் தகுதியுள்ள உலகளாவிய 201 திரைப்படங்களின் பட்டியலில் ‘காந்தாரா சாப்டர் 1’ இடம்பெற்றுள்ளது. சிறந்த திரைப்படப் பிரிவு மட்டுமின்றி, சிறந்த நடிகர் உள்ளிட்ட பிற பிரிவுகளிலும் இந்தப் படம் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் அகாடமி விதித்துள்ள தகுதி வரம்புகளை இந்தப் படம் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது. இந்தப் பட்டியிலில் காந்தாராவுடன் சேர்த்து அனுபம் கெர் இயக்கிய ‘தன்வி தி கிரேட்’ திரைப்படமும் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 20 வெளியான காந்தாரா படமும் அப்போதைய ஆஸ்கார் பட்டியலில் இடம்பெற்றது. அனால் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை.

98-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் வரும் ஜனவரி 22, 2026 அன்று அறிவிக்கப்பட உள்ளது. அதில் ‘காந்தாரா சாப்டர் 1’ இறுதிப் பட்டியலுக்குள் நுழையுமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

காந்தாரா சாப்டர் 1 படத்தை தவிர, “மகா அவதார் நரசிம்மா”, “டூரிஸ்ட் ஃபேமிலி”, “தன்வி தி கிரேட்” உட்பட நான்கு இந்தியத் திரைப்படங்கள் 2026 ஆஸ்கர் விருதுகளில் சிறந்த திரைப்படம் விருதுக்குப் போட்டியிடத் தகுதி பெற்றுள்ள 201 திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளதாக அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அறிவித்துள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *