ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம்; கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறிய பவன் கல்யாண்

ஆஸ்கர் தேர்வுக்குழுவில் இடம்; கமல்ஹாசனுக்கு வாழ்த்து கூறிய பவன் கல்யாண்


சென்னை,

அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கர் விருது பெறும் படங்களைத் தேர்வு செய்யும் குழுவில் இடம்பெறுமாறு நடிகர் கமல்ஹாசனுக்கு ஆஸ்கர் விருதுக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் கமல்ஹாசனுடன் நடிகர் ஆயுஷ்மான் குரானா, படத் தயாரிப்பாளர் கபாடியா, காஸ்டியூம் டிசைனர் மேக்சிமா பாசு, டாக்குமென்டரி இயக்குனர் ஸ்மிருதி முந்த்ரா, ஒளிப்பதிவாளர் ரன்பீர் தாஸ் ஆகியோருக்கும் ஆஸ்கர் நிர்வாகக் கமிட்டி அழைப்பு விடுத்துள்ளது.

98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான தேர்வு குழுவில் இணையவுள்ள கமல்ஹாசன் அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகரும், ஆந்திர மாநில துணை-மந்திரி பவன் கல்யாண் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதை விட மேலானவர். அவரது புத்திசாலித்தனம் மற்றும் பன்முகத் திறமையின் மூலம் நடிகராக, கதைச்சொல்லியாக, இயக்குநராக இந்திய மற்றும் உலக சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். சினிமாவின் ஒவ்வொரு அங்கத்திலும் அவர் செலுத்திய ஆதிக்கம், பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவர் உண்மையிலேயே கலையின் வித்தகர். மேலும் பல ஆண்டுகள் உலக சினிமாவுக்கு அவர் சேவையாற்ற மனதார வாழ்த்துகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *