ஆஷிகா ரங்கநாதத்தின் புதிய படம்…நாளை வெளியாகும் டைட்டில் , பர்ஸ்ட் லுக் |RT76 Title & First Look out tomorrow at 3.33 PM

சென்னை,
நடிகர் ரவி தேஜா கடைசியாக பானு போகவரபு இயக்கிய மாஸ் ஜதாராவில் நடித்தார். அந்தப் படம் பலரும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை, இப்போது அவர் தனது முழு கவனத்தையும் இயக்குனர் கிஷோர் திருமலா இயக்கும் தனது அடுத்த படமான அவரது ஆர்டி76-ல் செலுத்தியுள்ளார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். இந்த படத்தை சுதாகர் செருகுரி தயாரிக்க பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 3.33 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.






