'ஆர்.சி 16' – சிவராஜ்குமாரின் லுக் டெஸ்ட் புகைப்படம் வைரல்

சென்னை,
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவராஜ் குமார். தமிழில் ரஜினியின் ஜெயிலர், தனுஷின் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்தார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆண்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சில மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினார். அதையடுத்து மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறார்.
அதன்படி , கேம் சேஞ்சர் படத்தை அடுத்து ராம்சரண் நடிக்கும் 16 வது படத்தில் நடிக்க சிவராஜ் குமார் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில், சிவராஜ்குமாரின் லுக் டெஸ்ட் முடிந்திருக்கிறது. இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், விரைவில் படப்பிடிப்பில் அவர் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.