ஆர்.சி.பி.யின் வெற்றியைக் கொண்டாடும் பிரசாந்த் நீல்… வீடியோ வைரல்|B’day boy Prasanth Neel celebrates RCB’s win on Dragon’s set; Video goes viral

சென்னை,
நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றது.
இந்த வெற்றியை பிரபல இயக்குனர் பிரசாந்த் நீல் கொண்டாடும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் பிரசாந்த் நீல், ஒரு பெரிய திரையில் இறுதிப் போட்டியைப் பார்த்தார். அப்போது ஆர்.சி.பி வென்றபின், பிரசாந்த் துள்ளிக்குதித்து கொண்டாடுவதை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
அதில், “வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கருக்கு இது சிறந்த பிறந்தநாள் பரிசு,” என்று பதிவிட்டிருந்தார். பிரசாந்த் தற்போது முதல் முறையாக என்டிஆருடன் இணைந்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜூன் 25-ம் தேதி வெளியாக உள்ளது.