"ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன் அடங்கிவிட்டான்"- சபேஷின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்

"ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன் அடங்கிவிட்டான்"-  சபேஷின் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்


சென்னை,

தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவர் தேவா. இவரது சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் சேர்ந்து சபேஷ்-முரளி என்ற இரட்டை இசையமைப்பாளர் குழுவாக பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர். மேலும் இவர்கள் தேவாவின் திரைப்படங்களில் இசை உதவி பணிகளையும் செய்துள்ளனர்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சபேஷ், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவர் “ஜோடி, ஆட்டோகிராப்” உட்பட 20 படங்களுக்கு மேல் பின்னணி இசை அமைத்திருக்கின்றனர். தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் சபேஷ் பணியாற்றியிருக்கிறார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இசையமைப்பாளர் சபேஷின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக சேரன் வெளியிட்டிருக்கும் பதிவில்,

“தேனிசைத் தென்றல்

தேவாவின் இளவல்

இசையமைப்பாளர்

சபேஷ் மறைவு

மனவலியைத் தருகிறது

கலையன்றி

வேறொன்றும் அறியாத

இசையே வாழ்வென்று வாழ்ந்த

ஒரு சகோதரர் சபேஷ்

அமைதியானவர்;

அவர் பேசியதைவிட

வாசித்ததே அதிகம்

அவரது மறைவு

தேவா குடும்பத்தார்க்கு மட்டுமல்ல

வாசிக்கப்படும்

இசைக்கருவிகளுக்கெல்லாம்

இழப்பாகும்

ஆர்ப்பாட்டமில்லாத கலைஞன்

அடங்கிவிட்டான்

அவரது ஆருயிர்

அமைதி பெறட்டும்

ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டிருக்கிறார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *