ஆர்ஜின் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம்

சென்னை,
ஆர்ஜின் ஸ்டுடியோஸ் சார்பில் கண்ணதாசன் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ராஜ்குமார் ரங்கசாமி இயக்கும் இப்படத்திற்கு புரொடக்ஷன் நம்பர் 1 (Production NO 1) என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு குட் நைட், லவ்வர் , டூரிஸ்ட் பேமிலி, போன்ற படங்களுக்கு எடிட்டிங் செய்த பரத் இப்படத்துக்கு எடிட்டிங் செய்கிறார். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜோன்ஸ் ரூபர்ட் இசை அமைக்கிறார். இவர் பொறியாளன், சட்டம் என் கையில் படத்திற்கு இசையமைத்தவர்.
இந்த படத்தில் ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன் ஜோடியாக நடிக்கிறார்கள். இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் கிங்ஸ்லி, டி எஸ் ஆர், ஒளிப்பதிவாளர் ராஜூமேனன் மகள் சரஸ்வதி மேனன், இயக்குனர் சாய் ரமணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி, பொள்ளாச்சி, நாமக்கல் மற்றும் கோவா போன்ற இடங்களில் நடந்திருக்கிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த ஆண்டு படம் திரைக்கு வர உள்ளது.