ஆர்சிபி கோப்பையை வென்றால்…விராட் கோலிக்கு கோவில் கட்டுவேன் ‍‍ பிரபல நடிகர் |Nakuul Mehta expresses his excitement ahead of IPL 2025 finals between RCB vs PBKS; jokes, “I’ll make a temple for Virat Kohli”

சென்னை,

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் பெங்களூரு – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இவ்விறு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பை வென்றது கிடையாது என்பதால் யார் வெற்றிபெற போகிறார் என்பதைப் பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில், இறுதிப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக நடிகர் நகுல் மேத்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பகிர்ந்த வீடியோவில், “இறுதியாக 18 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் கோப்பையைத் தூக்கும் நாள் வந்துவிட்டது. விராட் தனது முதல் ஐபிஎல் கோப்பையை உயர்த்தப் போகிறார்.

வெற்றிபெற்றால், நான் கன்னடம் கத்துக்கொண்டு வீடியோ போடுகிறேன். தென்னிந்திய உணவை சாப்பிட ஆரம்பிப்பேன். விராட் கோலிக்கு ஒரு கோவில் கட்டுவேன், விஜய் மல்லையாவோட எல்லா கடன்களையும் கூட அடைப்பேன்’ என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *