’ஆரம்பத்தில் அவருடன் நடிக்க பதட்டப்பட்டேன்’- ஷ்ரத்தா கபூர்|’I was nervous about acting with him at first,’ said Shraddha Kapoor

’ஆரம்பத்தில் அவருடன் நடிக்க பதட்டப்பட்டேன்’- ஷ்ரத்தா கபூர்|’I was nervous about acting with him at first,’ said Shraddha Kapoor


மும்பை,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷ்ரத்தா கபூர். இவர் கடைசியாக ஸ்ட்ரீ 2 படத்தில் நடித்திருந்தார். புகழ்பெற்ற தமாஷா கலைஞர் விதாபாய் பாவ் மங் நாராயண்கோன்கரின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் படம் ‘ஈதா’.

இப்படத்தில் விதாபாய் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் நடித்துவருகிறார். ரந்தீப் ஹுடா கதாநாயகனாக நடிக்கிறார். லக்சுமன் உடேகர் இப்படத்தை இயக்குகிறார்.

இந்நிலையில், ஒரு நேர்காண்லில் கலந்துகொண்ட ஷ்ரத்தா கபூர், பிரபாஸுடன் பணிபுரிந்தது பற்றி பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில்,

“பாகுபலிக்குப் பிறகு பிரபாஸின் உடனடி படம் என்பதால், சாஹோவில் அவருடன் பணிபுரிவது குறித்து நான் ஆரம்பத்தில் பதட்டப்பட்டேன். அவர் என் பதட்டத்தைப் புரிந்துகொண்டார், என்னிடம் பேசினார், என்னை சவுகரியமாக உணர வைத்தார்” என்றார்.

பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடித்த படம் சாஹோ. சுஜீத் இயக்கிய இப்படத்தில் ஷ்ரத்தா கபூர், அருண் விஜய், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *