’ஆயிரத்தில் ஒருவன் ’ குறித்த கேள்வி – ஹிப்ஹாப் ஆதி பதில்|Question about ‘Aayirathil Oruvan 2’

’ஆயிரத்தில் ஒருவன் ’ குறித்த கேள்வி – ஹிப்ஹாப் ஆதி பதில்|Question about ‘Aayirathil Oruvan 2’


சென்னை,

2020ம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்கவுள்ளார்.

நேற்று காலை 9 மணியளவில் மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கான பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் பெரிய அளவில் அம்மன் சிலை அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்த பூஜையில் நயன்தாரா, குஷ்பு, மீனா, ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

பூஜைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஹிக்ஹாப் ஆதி, மூக்குத்தின் அம்மன்-2 படம், அரண்மனை-4 போல் ஒரு பிளாக்பஸ்டராக அமையும் என தெரிவித்துள்ளார். பின் அவரிடம், ஆயிரத்தில் ஒருவன்-2 படத்திற்கு இசையமைப்பதாக தகவல் வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அப்படியா! எனக்கே அது தெரியாது என்று கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *