ஆயிரக்கணக்கில் ஆணுறைகளை வாங்கி குவித்த இந்திய ராணுவம் – போர்களத்திலும் இப்படியா?

ஆயிரக்கணக்கில் ஆணுறைகளை வாங்கி குவித்த இந்திய ராணுவம் – போர்களத்திலும் இப்படியா?


பாகிஸ்தானுடன் போரில் இந்திய ராணுவம் ஆணுறைகளை எப்படி பயன்படுத்தினர் என பார்க்கலாம்.

இந்திய ராணுவம்

பழங்காலத்தில் இருந்தே போர் என்றாலே எதிரிகளை வீழ்த்த ஏராளமான தந்திரங்களைப் பயன்படுத்தும். அதேபோல தான் ராணுவம் பல்வேறு யுக்தியைப் பயன்படுத்துவார்கள். அப்படி தான் இந்திய ராணுவம் ஆணுறைகளைப் போரில் பயன்படுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கில் ஆணுறைகளை வாங்கி குவித்த இந்திய ராணுவம் - போர்களத்திலும் இப்படியா? | Indian Army Used Condems In War With Pakistan

கடந்த 1971ம் ஆண்டு டிசம்பர் 3 தொடங்கி 16ம் தேதி வரை இந்தியா பாகிஸ்தான் போர் நடைபெற்றது. இதில் இந்தியா சிறப்பாக வெற்றியை பெற்றது. அப்போது தான் ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது.

அதாவது அந்த காலகட்டத்தில்​​இந்திய விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.

பல்வேறு முனைகளில் இருந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் திக்குமுக்காடிப் போனது.. அந்த நேரத்தில் தான் பல ஆயிரம் ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டன. இந்த போரில், கிழக்கு பாகிஸ்தானின் சிட்டகாங் துறைமுகத்தையும் இந்தியா தாக்கியது.

ஆணுறைகள் 

அந்த மோதலின் போது, ​​இந்திய ராணுவம் பாகிஸ்தான் போர்க் கப்பல்களை அழிக்கத் திட்டமிட்டது. இதற்காக லிம்பெட் மைன் என்ற வெடிகுண்டைப் பயன்படுத்த வேண்டும். இந்த வெடிகுண்டைக் கடல் நீரில் போட்டால் கப்பல் வரும் போது அதை வெடிக்கச் செய்யலாம்.

ஆயிரக்கணக்கில் ஆணுறைகளை வாங்கி குவித்த இந்திய ராணுவம் - போர்களத்திலும் இப்படியா? | Indian Army Used Condems In War With Pakistan

ஆனால் பிரச்சினை என்னவென்றால் நீர் உள்ளே ஏறுவதால் அது கப்பல் வருவதற்கு முன்பே வெடிக்கும் ஆபத்து உள்ளது. அதிகபட்சம் 30 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். இதை சமாளிக்க தான் இந்திய ராணுவம் பல ஆயிரம் ஆணுறைகளை வாங்கியது.

பிறகு, லிம்பெட் வெடிகுண்டுகள் ஆணுறைகளில் வைக்கப்பட்டன. இதன் மூலம் வெடிகுண்டுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்கப்பட்டன. மேலும், சரியாகப் பாகிஸ்தான் கப்பல் வரும் நேரத்தில் அதை இந்திய ராணுவத்தால் வெடிக்க வைக்க முடிந்தது.

இதன் மூலம் குறுகிய காலத்தில் பல கப்பல்களை இந்திய ராணுவத்தால் அழிக்க முடிந்தது. இதன் மூலம் வெறும் இரண்டு வாரங்களில் போரை மொத்தமாக முடிவுக்குக் கொண்டு வரவும் இந்தியாவால் முடிந்தது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *