ஆபாச படங்களில் நடித்ததாக பிரபல நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு

எர்ணாகுளம்,
மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்வேதா மேனன். ரதிநிர்வேதம், சால்ட் அண்ட் பெப்பர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவரது அடுத்த படமான கரம் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், ஸ்வேதா மேனன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிதி ஆதாயத்திற்காக ஆபாச திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்ததாக கூறி எர்ணாகுளம் போலீசார் ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மார்ட்டின் மெனச்சேரி என்ற சமூக ஆர்வலர் அளித்த புகாரையடுத்து, எர்ணாகுளம் சிஜேஎம் நீதிமன்றம் உள்ளூர் போலீசாரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டதையடுத்து, அவர் மீது ஆபாசத்தைத் தடுக்கும் சட்டம் மற்றும் ஐடி சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான அம்மா (AMMA) நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் வரும் 15ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தச் சங்கத்திற்கான தலைவர் பதவிக்கு ஸ்வேதா மேனன் போட்டியிடும் நிலையில் ஸ்வேதா மேனன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.