ஆபாசமாக நடித்திருப்பதாக எழுந்த சர்ச்சை – விளக்கம் கொடுத்த நடிகை அபிநயா|Actress Abhinaya explains the controversy surrounding her alleged obscene performance

ஆபாசமாக நடித்திருப்பதாக எழுந்த சர்ச்சை – விளக்கம் கொடுத்த நடிகை அபிநயா|Actress Abhinaya explains the controversy surrounding her alleged obscene performance


திருவனந்தபுரம்,

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. அந்த படத்தில் சசிக்குமாரின் தங்கையாகவும் விஜய் வசந்த்தின் ஜோடியாகவும் அவர் நடித்திருப்பார்.

நாடோடிகள் படத்தை தொடர்ந்து ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், தாக்க தாக்க, ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் இவர் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பணி எனும் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் மிகவும் ஆபாசமாக நடித்திருப்பதாகவும், இது போன்ற காட்சிகளில் இவர் நடித்திருக்கக் கூடாது எனவும் அபிநயாவை பலரும் குறை கூறினார்கள்.

இந்த நிலையில் இதுகுறித்து செய்கை மொழியின் மூலம் பேட்டி கொடுத்த நடிகை அபிநயா, “அந்த காட்சி படத்தில் இடம்பெற வேண்டும் என்பதும் அதில் நான் எப்படி நடிக்க வேண்டும் என்பதும் முழுக்க முழுக்க இயக்குனர் எடுத்த முடிவு. அதைப் பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. பணி படத்தை இயக்கிய ஜோஜு ஜார்ஜ் ஒரு மிகச் சிறந்த நடிகர். புகழ்பெற்ற நடிகர்களுடனும் இயக்குனர்களுடனும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *