ஆனந்த் தேவரகொண்டா-வைஷ்ணவி சைதன்யாவின் புதிய படத்தின் பூஜையில் ராஷ்மிகா மந்தனா|Rashmika Mandanna Seen On The Sets Of Anand Deverakonda-Vaishnavi Chaitanya’s New Film

சென்னை,
கடந்த 2023- ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பேபி. விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்கேஎன் தயாரிப்பில் சாய் ராஜேஷ் இயக்கிய இப்படம் 5 பிலிம்பேர் விருதுகளை அள்ளியது.
தற்போது இவர்கள் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்கள். துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் உள்ளிட்ட படங்களை தயாரித்த சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.
#90ஸ் என்ற வெப் தொடரை இயக்கி பிரபலமான ஆதித்யா ஹாசன் இயக்கும் இப்படத்திற்கு அஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் பூஜை நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்துகொண்டிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க இருக்கிறது.
‘பேபி’ படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்த ஆனந்த் தேவரகொண்டா-வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.