ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம்

ராமநாதபுரம்,
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவரது காமெடிகள் காலங்கள் கடந்தும் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகின்றன.
இவர் தற்போது பிரபல மலையாள இயக்குனர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ‘மாரீசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பகத் பாசில் வடிவேலுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு, இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.