ஆக்சன் திரில்லர் படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ?

சென்னை,
பாலிவுட்டில் சிறப்புப் பாடல்களில் நடனமாடி அதிக ரசிகர்களை கவர்ந்தவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். சமீபத்தில் ”ரெய்டு 2” படத்தில் இவர் நடனமாடி இருந்தார்.
சிறப்பு பாடல்களுக்கு மட்டுமில்லாமல், கிக், ஜுட்வா 2, ஹவுஸ்புல் மற்றும் பதே போன்ற பாலிவுட் படங்களில் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், டோலிவுட் இயக்குனர் வி. ஜெயசங்கர் இயக்கும் பெண்ணை மையமாக கொண்ட ஆக்சன் திரில்லர் படத்தில் ஜாக்குலின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஜாக்குலின் இந்த படத்தில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.