'ஆகக்கடவன' திரைப்பட விமர்சனம்

'ஆகக்கடவன' திரைப்பட விமர்சனம்


சென்னை,

ஆதிரன் சுரேஷ், ராகுல், ராஜசிவன் ஆகியோர் மருந்தகத்தில் வேலை பார்க்கிறார்கள். ஒருகட்டத்தில் மருந்தகத்தை விற்க உரிமையாளர் முடிவு செய்ய, அதை மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து வாங்க முடிவு செய்கிறார்கள். இதற்காக அவர்கள் சேமித்து வைக்கும் பணம் திடீரென மாயமாகி விட திகைத்து போகிறார்கள்.

இதையடுத்து ஊரில் உள்ள தனது சொத்தை விற்க முடிவு செய்யும் ஆதிரன் சுரேஷ், ராகுலுடன் மோட்டார் சைக்கிளில் புறப்படுகிறார். செல்லும் வழியில் ‘டயர்’ பஞ்சராக, காட்டுப்பாதையில் இருக்கும் மெக்கானிக் ஷாப்புக்கு செல்கிறார்கள். அங்கு சிலரால் எதிர்பாரத பிரச்சினைகள் உருவாகிறது. அந்த பிரச்சினைகளை அவர்கள் சமாளித்தார்களா, இல்லையா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே பரபரப்பான மீதி கதை.

சாந்தமும், குழப்பமும் என கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கச்சிதமாக வழங்கி கவனம் ஈர்க்கிறார் ஆதிரன் சுரேஷ். நண்பர்களாக வரும் ராகுல், ராஜசிவன் ஆகியோரின் நடிப்பிலும் எதார்த்தம் தெரிகிறது. வில்லன்களாக மைக்கேல், வின்சென்ட் பயமுறுத்துகிறார்கள். மூச்சு விடாமல் கதைகள் பேசும் சதீஷ் ராமதாஸ் மற்றும் தஷ்ணா, விஜய் சீனிவாஸ் ஆகியோரின் கதாபாத்திரங்களும் நேர்த்தி.

லியோ வி.ராஜாவின் ஒளிப்பதிவும், சாந்தன் அன்பழகன் இசையும் படத்துக்கு உயிர். யூகிக்க முடியாத காட்சிகள் பலம். திரைக்கதையில் தடுமாற்றம் தெரிகிறது. கதாபாத்திரங்களின் பின்னணியை வலுவாக்கி இருக்கலாம். புதுமையான கதைக்களத்தில் பரபரப்பான காட்சிகளை திரட்டி கவனிக்க வைக்கும் படைப்பாக கொடுத்துள்ளார், இயக்குனர் தர்மா. கிளைமேக்ஸ் எதிர்பாராதது.

ஆகக்கடவன – தூரம் அதிகம்

 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *