அவிகா கோர் நடிக்கும் ‘அக்லி ஸ்டோரி’… டீசர் வெளியீடு|Ugly Story Intense Teaser Released Starring Nandu & Avika Gor

சென்னை,
நந்து மற்றும் அவிகா கோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் படம் ‘அக்லி ஸ்டோரி’. ரியா ஜியா புரொடக்சன்ஸ் பதாகையின் கீழ் சி.எச். சுபாஷினி மற்றும் கோண்டா லக்சமன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
பிரணவ் ஸ்வரூப் இயக்கும் இப்படத்தில் சிவாஜி ராஜா, ரவி தேஜா மகாதஸ்யம் மற்றும் பலர் மற்ற கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.