’அவர்களுடன் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன்’ – கயடு லோஹர்

சென்னை,
‘லவ் டுடே’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஜி.எஸ் நிறுவனம் மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘டிராகன்’. இப்படத்தில், கயடு லோஹர் , விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக இருக்கும்நிலையில், தெலுங்கில் ‘ரிட்டர்ன் ஆப் தி டிராகன்’ என்ற பெயரில் வெளியாகிறது. இந்நிலையில், அதன் புரமோஷன் பணியின்போது பேசிய நடிகை கயடு லோஹர், ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “அஸ்வத் ஒரு சிறந்த இயக்குனர். அதேபோல், பிரதீப் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். ஏ.ஜி.எஸ் போன்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் மீண்டும் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். அனைவரும் டிராகனுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும்’ என்றார்.






