அல்லு அர்ஜுன்-அட்லீ கூட்டணியில் இணைந்த பிரபல நடிகை

சென்னை,
‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளார். பீரியட் கதையைக் கொண்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தினை இந்திய சினிமாவில் இப்படியொரு கதைக்களம் கொண்ட படம் வந்ததில்லை என்ற அளவிற்கு ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளார் இயக்குநர் அட்லீ.
பேரலல் யூனிவர்ஸ் கான்சப்டில் உருவாகி வரும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் தற்பொழுது இணைந்துள்ளார். யகியாக தீபிகா படுகோன் தற்பொழுது இணைந்துள்ளார். இது தொடர்பாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.