அர்ஜுன் இயக்கும் "சீதா பயணம்" படத்தின் டீசர் அப்டேட்

அர்ஜுன் இயக்கும் "சீதா பயணம்" படத்தின் டீசர் அப்டேட்


சென்னை,

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்சன் கிங் அர்ஜுன். அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், கர்ணா, முதல்வன்’ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இதற்கிடையில் இவர் 1992-ல் வெளியான ‘சேவகன்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். ‘ஜெய் ஹிந்த்’, ‘தாயின் மணிக்கொடி’, ‘வேதம்’, ‘ஏழுமலை’ என 12 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் தனது மகள் ஐஸ்வர்யாவை வைத்து ‘சொல்லிவிடவா’ படத்தை இயக்கியிருந்தார்.

இந்தநிலையில் மீண்டும் இயக்குனர் ஆகிறார். அர்ஜுன். நிரஞ்சன் மற்றும் ஐஸ்வர்யா நடிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது.சத்யராஜ் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அவர் இயக்கும் புதிய படத்துக்கு ‘சீதா பயணம்’ என பெயரிடப்பட்டுள்ளது. தனது ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இவரது மகள் நடிகை ஐஸ்வர்யா இத்திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். சமீபகாலமாக அவர் ஹீரோவாக நடிக்காமல் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

கன்னட சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சகோதரி மகன் துருவா சர்ஜா. இவர் நடித்த மார்ட்டின் படம் சமீபத்தில் வெளியானது. இவரும் இப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அர்ஜுன் இயக்கும் ‘சீதா பயணம்’ படத்தின் டீசர் வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

View this post on Instagram

A post shared by Sree Raam Films International (@sreeraamfilmsofficial)

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *