அருப்புக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு எந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா, Actress Trisha donates mechanical elephant to Aruppukottai Vinayagar temple,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் செல்வ விநாயகர் கோவில் மற்றும் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சத்தில் எந்திர யானையை வழங்கி இருக்கிறார்கள். 3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜயானை போன்று பிரமாண்டமாக இந்த எந்திர யானை உள்ளது. அதற்கு கஜா என பெயரிட்டு இருக்கிறார்கள்.
கேரளாவில் உருவாக்கப்பட்ட இந்த எந்திர யானைக்கு தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. சக்கரங்கள் மூலம் வீதி உலா அழைத்துச்செல்ல முடியும். சுவாமி ஊர்வலத்துக்கும் பயன்படுத்த முடியும். இந்த எந்திர யானை காதுகள், தும்பிக்கை மற்றும் தலையையும் அசைக்கிறது. பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் செய்கிறது.
இந்த எந்திர யானையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க கோவிலில் இன்று நடைபெற்றது. அந்த யானை நகர வீதிகளில் அழைத்து செல்லப்பட்டபோது, மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.