அரசியலுக்கு வர துடிக்கும் ரஜினி பட நடிகை

ஐஸ்வர்யா இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த ‘லால் சலாம்’ படம், கடந்த ஆண்டு வெளியானது. கேரளாவை சேர்ந்த இளம் நடிகை அனந்திகா சனில்குமார், இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது தெலுங்கில் ‘8 வசந்தலு’ என்ற படத்தில் நடித்துள்ளார்.இப்படம் வரும் 20ம் தேதி வெளியாகிறது.இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனந்திகாவிடம், அவரது சினிமா பயணம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது, ‘சினிமா தாண்டி உங்களது பெரிய ஆசை என்ன?’ என்று கேட்கப்பட்டது. இதற்கு அனந்திகா பதில் அளிக்கையில், “சினிமாவில் நல்ல படங்கள் நடிக்க வேண்டும் என்பது என் ஆசை. அதேவேளை நடிப்புடன் சேர்ந்து, நான் சட்டமும் படித்து வருகிறேன். நான் ஒரு அரசியல்வாதியாகி தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். அதுதான் என்னுடைய உச்சபட்ச ஆசை. எனக்கு 40 வயது ஆகும்போது, அரசியலில் நுழைவது பற்றி தீவிரமாக யோசிப்பேன்” என்று குறிப்பிட்டார்.
சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும், தொழில் அதிபராக கலக்க வேண்டும் என்று கூறும் நடிகைகள் மத்தியில் அனந்திகாவின் இந்த கருத்து கவனம் ஈர்த்துள்ளது.