“அரசியலுக்கு வர எனக்கு விருப்பம் இல்லை..” – நடிகர் விஜய் ஆண்டனி | “I have no desire to enter politics..”

மதுரை,
விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார்.
இவர் தற்போது ‘சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்’ உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் ‘மார்கன்’ படத்தில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக படத்தின் புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற பட விழாவில் நடிகர் விஜய் ஆண்டனியிடம் அரசியல் வரவு குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, “பிரபலம் ஆகிவிட்டேன் என்பதற்காக நான் அரசியலுக்கு வர முடியாது. எனக்கு அரசியல் அறிவு கிடையாது. 50 வயது ஆகிவிட்டது, இனிமேல் அதை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும், அரசியல் வடிவில் அதை செய்யும் எண்ணம் எனக்கு இல்லை” என கூறியுள்ளார்.