“அரசன்” படத்தின் கதை தரமா இருக்கும்.. ஆனால் – நடிகர் கவின் | The story of the film “Arasan” will be good.. but

“அரசன்” படத்தின் கதை தரமா இருக்கும்.. ஆனால் – நடிகர் கவின் | The story of the film “Arasan” will be good.. but


இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ என்ற புதிய படத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வருகிறார். இப்படம் வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தில் சிம்பு இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் கவின் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது, அரசன் படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, “அரசன் படத்தை பற்றி எனக்கு எல்லாமே தெரியும். இந்த படத்தின் கதை தரமா இருக்கும். ஆனால் அதை நான் வெளியே சொல்ல மாட்டேன். இந்த படம் சிலம்பரசன், வெற்றிமாறன், மற்றும் அனிருத் ஆகியோரின் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும். இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஒரே படத்தில் பணியாற்றுவது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்று கூறியுள்ளார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *