“அரங்கம் அதிரட்டுமே.. விசில் பறக்கட்டுமே” கூலி பட டீசர் வெளியீடு

“அரங்கம் அதிரட்டுமே.. விசில் பறக்கட்டுமே” கூலி பட டீசர் வெளியீடு


சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் சுருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், அமீர் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதில் பூஜா ஹெக்டே சிறப்பு நடனம் ஆடியுள்ளார்.

இந்நிலையில் ‘கூலி’ படத்தின் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது, கூலி படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த டீசரை வெளியிடப்பட்டுள்ளது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *